ஆவியூர் மயான பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை வாகனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் கொத்தனார் வேலை செய்து வருவதாகவும் கடந்த இரண்டாம் தேதி மாலை இரவு 8 மணி அளவில் ஆவியூர் மேலத் தெருவில் உள்ள மயானம் அருகே தண்ணீர் தொட்டி அருகே தனது தம்பிக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பெட்ரோல் வாங்க சென்று விட்டதாகவும் பெட்ரோல் வாங்கி விட்டு வந்து பார்த்த பொழுது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பல்வேறு பகுதிகளில் தேடியும் வாகனம் கிடைக்காதது அடுத்து ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஆவியூர் காவல் நிலைய போலீசார் காணாமல் போன 30 ஆயிரம் மதிப்பிலான பல்சர் வாகனத்தை தேடி வருகின்றனர்.