விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10. 00 மணி முதல் மாலை 1. 00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவச்சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல் பணி மேற்கொள்ள உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-4 உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068 எண்னை தொடர்பு கொள்ளலாம்.