*விருதுநகர் மாவட்டத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்திட வேண்டும் காட்டுப் பண்றிகளால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு*
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா கிருஷ்ணப்பேரி, ஈஞ்சார் , நாகலாபுரம், நடுவ பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் பயிர் செய்யப்பட்டு இருந்ததாகவும்
பயிர்கள் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக பல்வேறு வழிகளில் வந்து மக்காச்சோள பயிர்களை அழித்து விட்டதாக கூறப்படுகிறது
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்திருந்தனர் மனு அளிக்க வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்களை முற்றுகையிட்டு தங்களுடைய குறைகளை கூறினார் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் விவசாயிகளிடம் இருந்து மனுக்களையும் பெற்றுச் சென்றார்
பேட்டி: விஜய முருகன் - மாவட்ட தலைவர் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)