சிவகாசி: மனநிலை பாதித்த பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மனநிலை பாதித்த பெண் இரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்தார். மயிலாடுதுறை - செங்கோட்டை இரயில் நவம்பர் 13 மாலை திருத்தங்கல் ரயில் நிலையத்தை நெருங்கும் போது 42 வயது பெண் ஒருவர் இரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே காவல் சார்பு ஆய்வாளர் பொன்குமார் மற்றும் இரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண் சடலத்தை கைப்பற்றி அவர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர். இறந்த நபர் திருத்தங்கல் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள் என தெரிந்தது. பேச்சியம்மாள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் இரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.