சிவகாசி: பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு...

76பார்த்தது
சிவகாசியில் சுற்று வட்ட சாலை அமைய உள்ள பகுதியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சுமார் ரூ. 400 கோடி செலவில் சுற்றுவட்டசாலை அமைய உள்ளது. இந்த சுற்று வட்டசாலை அமைத்தால் சிவகாசி நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் இருக்காது. இதற்காக முதல் கட்டமாக இடம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது. இந்த நிலையில் சுற்று வட்டசாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அதன்படி முதல் கட்டமாக வடப்பட்டி,
நமஸ்கரித்தான்பட்டி, திருத்தங்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் சுற்று வட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு சிவகாசி அருகே உள்ள வடமலாபுரத்தில் சுற்றுவட்ட சாலை அமைய உள்ள பகுதியை நேரில் திடீர் ஆய்வு செய்தார். இதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி