திருவில்லிபுத்தூர் அருகே உள்ள
சதுரகிரிமலைக்கு, பக்தர்கள் செல்ல 4 நாட்கள் வனத்துறை அனுமதி.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். நாளை நவ. 13ம் தேதி (புதன் கிழமை) ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் மற்றும்
வரும் 15ம் தேதி (வெள்ளி கிழமை) ஐப்பசி மாத பௌர்ணமி உள்ளிட்ட 4 நாட்களும் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக, மலைக் கோவிலுக்கு செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பக்தர்கள் நீரோடைகளில் குளிக்க வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,
அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் காலை 6 மணி முதல், நன்பகல் 12மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் மலைப் பகுதிகளில் மழை பெய்தால் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை அறிவிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.