சிவகாசி: முதல்வர் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு...

59பார்த்தது
கந்தக பூமியில் ரூ 15 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் மாநாட்டு அரங்கம். முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் வரவேற்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சியில் அரசு சார்பாக ரூ. 15கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தது மாநகராட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாள் கள ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர், விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக சிவகாசி மாநகராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பாக ரூ. 15கோடி மதிப்பீட்டில் 13 ஆயிரம் ச. அடி மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தது மாநகராட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி