சிவகாசியில் மாநகர திமுக சார்பாக கூட்டம். முதல்வருக்கு
உற்சாக வரவேற்பளிக்க மாநகர திமுக தீா்மானம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கலில் மாநகர திமுக சார்பாக செயற்குழு கூட்டம் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் நடைப்பெற்றன. கூட்டத்தில் விருதுநகருக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும் என மாநகர திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை நவ. 9ஆம் தேதி விருதுநகர் வருகை தர உள்ளார். அன்றைய தினம் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குகின்றார். தொடர்ந்து 10ஆம் தேதி விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;மக்கள் நலத் திட்டங்களை வழங்கிட விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர்மு. க. ஸ்டாலினுக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெறும் உற்சாக வரவேற்பில் சிவகாசி மாநகர திமுகவில் இருந்து 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்திற்கு திமுகவை சேர்ந்த ஆண், பெண் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.