சிவகாசி: குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவல நிலை....

53பார்த்தது
சிவகாசி அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் மக்கள் அதிருப்தி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி தேரடி முக்கில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி சேர்மன் சண்முகநாடார் ரோட்டிலுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியிலிருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் புதுத்தெரு, அம்மன் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர்
வினியோகம் செய்வதற்காக முருகன் கோயில், தேரடி முக்கு வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேரடி முக்கு பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக உடைந்த குழாய்களை சீர் செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி