தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மினி, சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றன. பின்னர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம். கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிவகாசி மக்களின் நலன் கருதி பல்வேறு நலதிட்ட உதவிகளை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தங்களது வார்டு பகுதியில் குடிநீர், சுகாதாரம், வாறுகால், மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர கூறி பேசப்பட்டன. கூட்டத்தில் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.