சிவகாசியில் மாநில அளவிலான வளைபந்து போட்டி. ஏராளமான வீரர்கள் மற்றும் வீராகனைகள் பற்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தமிழ்நாடு வளைபந்து கழகமும், விருதுநகர் மாவட்ட வளைபந்து கழகமும் இணைந்து 46 வது 17 வயதுக்குட்பட்ட ஜூனியர் வளைபந்து போட்டி நடைபெற்றன. இப்போட்டியில் திருப்பத்தூர், கோவை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்பட 15 மாவட்டத்திலிருந்து சுமார் 200க்கு மேற்பட்ட வீரர்கள் வீராகனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடைப்பெற்றன. இறுதி போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாலை ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மோதியதில் தமிழ் 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை சாலை ஹரிகிருஷ்ணன் பிடித்தனர். தொடர்ந்து பெண்களுக்கான போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மணிமொழியும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரியும் மோதியதில் மணிமொழி 2 - O என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தையும், இரண்டாவது இடத்தை மகேஸ்வரியும் பிடித்தனர். பின்னர் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வளைபந்து கழக செயலாளர் சங்கர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராகனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தனர்.