ஸ்ரீவி: சிறப்பு இரயில் இயக்க எம்.எல்.ஏ கோரிக்கை மனு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் என்ற ஆன்மீக ரயில்சேவையை தொடங்க வேண்டுமென சிவகாசி எம்எல்ஏ அசோகன், மதுரையில் தென்னக ரயில்வே மண்டல மேலாளர் சரத்ஸ்ரீவாஸ்தவாவை அசோகன் எம்எல்ஏ நேற்று நேரில் சந்தித்து கொடுத்துள்ள மனுவில் தொழில் நகரான சிவகாசியில் ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதைகள் இல்லாததால் தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. தற்போது சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் மாற்றுப் பாதையிலுள்ள செங்கமலநாச்சியார்புரம் ரயில்வே கேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் கோவை-மதுரை-கோவை ரயிலை செங்கோட்டை வரை இயக்க வேண்டும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ஆன்மீக ரயில் இயக்க வேண்டும். சிவகாசி ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியிலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் குட்ஸ்ஷெட் பகுதியில் கூடுதல் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும், அமரீத் பாரத் திட்டத்தின் கீழ் சிவகாசி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளார்.