விருதுநகர் மாவட்டம் கோயம்புத்தூர்-திண்டுக்கல் மெமு ரயில் சேவை நீட்டிப்பு. இரயில்வே அறிவிப்பு. மேலும் பயணிகள் வசதிக்காக கோயம்புத்தூர்-திண்டுக்கல் இடையே தினந்தோறும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெமு ரயில் சேவை நவம்பர் 6 வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர்- திண்டுக்கல் மெமு சிறப்பு ரயில் (06106) கோயம்புத்தூரில் இருந்து காலை 09. 35 மணிக்கு புறப்பட்டு மதியம் 01. 10 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06107) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02. 00 மணிக்கு புறப்பட்டு மாலை 05. 50 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும். மேலும் இந்த மெமு சிறப்பு ரயிலில் 8 ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்று இரயில்வே அறிவித்துள்ளது.