உத்தரகாண்ட் கார்வார் அருகில் பருந்து ஒன்று 5 நாட்களாக சுற்றி வருவதைக் கண்டு சந்தேகமடைந்த சிலர், கேமரா மூலம் ஜூம் செய்து பார்த்தபோது, அதன் உடலில் GPS, ட்ரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை வந்து ஆய்வு செய்தபோது பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி நிறுவனம் பருந்துகளின் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி செய்யும் நோக்கில் பருந்தின் முதுகில் ட்ரான்ஸ் மீட்டர் பொருத்தி பறக்கவிட்டது தெரியவந்தது.