சிவகாசி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே விஸ்வநத்தம் நடுவூரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி செல்வி (46). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு காரியாபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் செல்வியின் வீட்டின் மேற்கூரையின் ஒட்டை பிரித்து பீரோவில் இருந்த 2 ஜோடி கம்பல், மோதிரம், ரொக்க பணம் ரூ. 4 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.