சிவகாசி - Sivakasi

சிவகாசி: பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

சிவகாசியில் சுற்று வட்ட சாலை அமைய உள்ள பகுதியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் ஆய்வு. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சுமார் ரூ. 400 கோடி செலவில் சுற்றுவட்டசாலை அமைய உள்ளது. இந்த சுற்று வட்டசாலை அமைத்தால் சிவகாசி நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் இருக்காது. இதற்காக முதல் கட்டமாக இடம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது. இந்த நிலையில் சுற்று வட்டசாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அதன்படி முதல் கட்டமாக வடப்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, திருத்தங்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் சுற்று வட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு சிவகாசி அருகே உள்ள வடமலாபுரத்தில் சுற்றுவட்ட சாலை அமைய உள்ள பகுதியை நேரில் திடீர் ஆய்வு செய்தார். இதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Nov 09, 2024, 13:11 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

விருதுநகர்: மண் குவியல்களை குவித்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள்

Nov 09, 2024, 13:11 IST
அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு பணிக்கு வருவதை ஒட்டி அவசர கதியில் சாலை நடுவே இருந்த மண் குவியல்களை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய் அருகே குவித்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலை மதுரை சாலை போன்ற சாலைகளில் அதிகளவு மண் தூசுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மண் தூசுகள் அனைத்தும் சாலை நடுவே செண்டர் மீடியன் ஓரமாக குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு மேற்கொள்ள வந்தார். அமைச்சர் ஆய்வுக்கு வரவுள்ளதை முன்னிட்டு பல வருடங்களாக அப்புறப்படுத்தாத அந்த மண் குவியல்களை நெடுஞ்சாலை துறையினர் அவசரகதியில் அள்ளி அப்புறப்படுத்தினர். அப்படி அகற்றப்பட்ட மண் குவியல்களை வேறு இடத்தில் சென்று கொட்டாமல் ஏற்கனவே மண் மூடி அடைபட்டு காணப்படும் கழிவுநீர் கால்வாய் அருகே கொட்டினர். ‌ இதனால் பகுதியில் மேலும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனை எதிரே வளைந்து காணப்பட்ட ரெப்லெக்டர் இரும்பு பதாகையையும் கையாலேயே நிமிர்த்த முயற்சித்தனர்.