சாத்தூர் - Sattur

சாத்துார்: இளைஞரிடமிருந்து கஞ்சா பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலுள்ள வெள்ளைக்காரர் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் கேசவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சிவகாசி விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் 18 வயதுடைய இளைஞர் மணிகண்டன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
விருதுநகர்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வு
Nov 27, 2024, 14:11 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

விருதுநகர்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வு

Nov 27, 2024, 14:11 IST
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை எல்லோர் மனங்களிலும் விதைத்து, நமது இந்திய நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாகப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.