நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து வேண்டி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு நடந்த திருமணம் செல்லாது என இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.