திருக்கோவிலூர் - Tirukoilur

திருவெண்ணைய்நல்லூரில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

திருவெண்ணைய்நல்லூரில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லுார் அருகே முதல்வர் வருகையையொட்டி நடைபெற்று வரும் பணியை ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் வரும் 29ம் தேதி ஏனாதிமங்கலம் - கப்பூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட எல்லீஸ் சத்திரம் அணைக் கட்டை திறந்து வைக்க உள்ளார். அதனையொட்டி அப்பகுதியில் சாலை அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. அதனை திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் குத்தலா ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோஜ், மின்வாரி செயற்பொறியாளர் சீனிவாசன் உடனிருந்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்