திருக்கோவிலூர் - Tirukoilur

ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம்

ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம்

கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. அதனையொட்டி நேற்று (நவ.,7) காலை 9:00 மணிக்கு ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து கம்பம் நிலை நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.  மாலை 5:00 மணிக்கு வெற்றி வேல்களுக்கு குளக்கரையில் அபிஷேக ஆராதனை நடந்தது. பின், வீரவாகு தேவர்கள் வீதியுலா வந்து கம்பம் ஏறினர். இரவு வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிகள் வீதியுலாவும் அதிகாலை 3:00 மணியளவில் சூரபதுமன் சம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்