விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் திமுக அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். உடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ சிவா மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்