வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட மூன்று பேர் கைது

59பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது மழவந்தாங்கல் வனப்பகுதி. இந்தப் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி திருக்கோவிலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவன கலெக்ஷன் ஏஜென்ட் ஆக உள்ள ஸ்டீபன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரமாக இருந்த 16 வயது சிறுவன், தனக்கு லிப்ட் கேட்டதை அடுத்து லிப்ட் கொடுத்துள்ளார். இதனை அடுத்து வனப்பகுதி அருகே சென்றபோது வாகனத்தை நிறுத்துமாறு சிறுவன் அறிவுறுத்தியுள்ளான். அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி வாகனத்தை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த சிறுவனின் கூட்டாளிகளான மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த அஜித் மற்றும் சதிஷ் ஆகிய 2 இளைஞர்கள் என மூன்று பேரும் நிதி நிறுவன ஊழியரை பியர் பாட்டிலை காட்டி மிரட்டி 26, 160 ரூபாய் ரொக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு ஊழியரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து அனுப்பி உள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஸ்டீபன் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு சதீஷ், அஜித், மற்றும் 16 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டாச்சிபுரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 26 ஆயிரத்து 160 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி