திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவில் சுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா துங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6: 30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசம், யாகசாலை பூஜை, சத்ருசம்ஹார சுப்ரமணிய திரிசதி நாமாவளி, ஹோமம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு மகா அபிஷேக, வெள்ளிக் கவச அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.