திருக்கோவிலூரில் முருகர் திருக்கல்யாண விழா

83பார்த்தது
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான வீரட்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில், இன்று (நவம்பர் 8) கந்த சஷ்டி விழாவின் இறுதி நிகழ்ச்சியை ஒட்டி முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வினை காண திருக்கோவிலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி