விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ், (48); இவருக்கு பட்டணம், இந்திரா நகர் பகுதியில் இருளர் வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே அவரது பட்டா இடம் உள்ளது. இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் எல்லம்மாள், (50); இவருக்கும், தன்ராஜிக்கும் இடம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி, தன்ராஜிக்கு ஆதரவாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட அ. ம. மு. க. , செயலாளர் வழக்கறிஞர் முத்து, எல்லம்மாள் தரப்பினரிடம் இடப் பிரச்னை குறித்து கேட்டபோது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. புகாரின் பேரில், 9 பேர் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, தன்ராஜ் உட்பட 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில், அ. ம. மு. க. , பிரமுகர் முத்துவை நேற்று (அக்.,8) போலீசார் கைது செய்தனர்.