திண்டிவனம் - Tindivanam

திண்டிவனம் அருகே ஆசிரியர் விபத்தில் இறப்பு

திண்டிவனம் அருகே ஆசிரியர் விபத்தில் இறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தாண்டவ சமுத்திரம் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமணி மகன் அந்தோணி தினேஷ், 30; சென்னை, குன்றத்துாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று சொந்த ஊரிலிருந்து குன்றத்துாருக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். மாலை 2: 30 மணியளவில், திண்டிவனம் புறவழிச்சாலையில் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி அருகே சென்றபோது, மேல்மருவத்துாரிலிருந்து கிருஷ்ணகிரி சென்ற பொலிரோ பிக்அப் வேன், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அந்தோணி தினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా