திருச்சிற்றம்பலத்தில் இயங்கி வரும் வானூர் அரசு கல்லுாரியில் சக்கரபாணி எம்.எல்.ஏ., இன்று (அக்.,8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கல்லூரியின் ஆண்டு மலர் மற்றும் மாணவர் கையேட்டை, கல்லூரி முதல்வர் வில்லியம், எம்.எல்.ஏ.,விடம் வழங்கினார். பின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று ஆய்வு செய்த சக்கரபாணி பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் பயின்று, உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.