திண்டிவனம் பள்ளியில் ஓட்டப்பந்தய ஓடுதள பாதை திறப்பு

63பார்த்தது
திண்டிவனம் பள்ளியில் ஓட்டப்பந்தய ஓடுதள பாதை திறப்பு
திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்யசபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு விழாவில், முன்னாள் அமைச்சர் சண்முகம் இன்று கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர் சண்முகம் எம். பி. , தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் செலவில், திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைபள்ளியின் சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், பள்ளி மைதானத்தில் ஓட்டப்பந்தய ஓடுதளம் அமைக்கும் பணி முடிவடைந்தது.

இதை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னாள் அமைச்சர் சண்முகம் புதிய பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். இதில், திண்டிவனம் நகர அ. தி. மு. க. , செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், பள்ளியின் தாளாளர் செல்லதுரை, தலைமையாசிரியர் சந்திரன் தேவநேசன், ஆயர் நீதிநாதன், உதவி தலைமையாசிரியர் மோகன், எம். டி. கிரேன் பள்ளி முன்னாள் தலைமையாசிரியை மேரிவினோதினி மற்றும் மாநில எம். ஜி. ஆர். , மன்றம் ஏழுமலை, ரவி, மாவட்ட ஜெ. , பேரவை நிர்வாகிகள் குமார், ரூபன்ராஜ், வடபழனி, சக்தி பெரியதம்பி, மகளிர் அணி தமிழ்ச்செல்வி, முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், ஜாகீர்உசேன், இளைஞரணி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி