ராணிப்பேட்டை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று(அக்.26) வெளியிட்ட அறிக்கையில், பண்டிகை நாட்களை முன்னிட்டு, பிரபல கடைகள் மற்றும் உணவகங்கள் பேரில் பரிசு கூப்பன்கள் அளிப்பதாக கூறி வாட்ஸ்அப் லிங்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு அந்த போலியான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.