ஒதுங்கி நின்றவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது!
ராணிப்பேட்டை ஏகாம்பரநல்லூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). இவர் நேற்று (செப்.10) அதே பகுதியில் மழைக்காக ஒதுங்கி நின்றார். அப்போது அந்த வழியாக வந்த ராஜ்கிரன், தேவராஜ், ஈஸ்வரன், உள்ளிட்ட சிலர் முன்விரோதம் காரணமாக சதீஷ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தேவராஜ், ரவி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.