அமைச்சர் தலைமையில் கனமழை எச்சரிக்கை ஆய்வு கூட்டம்
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை திரு. ஆர். காந்தி அவர்கள் தலைமையில் இன்று (15. 10. 2024) இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை -2024 னையெட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மீட்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி. மரியம் பல்லவி பல்தேவ், இ. ஆ. ப. மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ. யு. சந்திரகலா. இ. ஆ. ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண் ஸ்ருதி, இ. கா. ப. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ. எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ந. சுரேஷ். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி. பா. ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. விஜயராகவன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர் உள்ளனர்.