வாலாஜா: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் வாலாஜா சுங்கச்சாவடி அருகே உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் தீபன்ராஜ் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 54 ஆயிரம் மதிப்புள்ள 6 மூட்டை புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர். தொடர்ந்து கடைக்கு சீல் வைத்தனர்.