கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், வழக்கு தொடர்பாக பேட்டியளித்தார். இதையடுத்து, இபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காரமன், இபிஎஸ்க்கு ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு வழங்க தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.