முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவர்களிடம் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்தமாக அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடத்திற்கு சொத்து வரி ரசீது, வாடகை இடத்திற்கு உரிமையாளரிடம் ஒப்பந்தப் பத்திரம் வேண்டும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு முதலில் ரூ.1.5 லட்சம் மானியம் வழங்கப்படும். இதில், மருந்தக உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். 2வது கட்டமாக ரூ.1.5 லட்சத்திற்கு மானியமாக மருந்துகள் வழங்கப்படும். விண்ணப்பிக்க: https://mudhalvarmarundhagam.tn.gov.in/project