சென்னையில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நபர், பழகிய ஒரே நாளில் 4 சவரன் நகையை பறித்து ஏமாற்றியதாக 34 வயது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான போரூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருடன் கத்திப்பாரா அருகே சந்தித்து பேசிய போது, தனது பர்ஸில் இருந்த 4 சவரன் செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு, சில நாட்களில் தருவதாக கூறிச் சென்றதாகவும், பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை என்று போலீசில் அப்பெண் புகார் அளித்துள்ளார்.