மீட்புப் பணி குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு!

57பார்த்தது
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி மழை மற்றும் வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது மற்றும் பொது மக்களை மீட்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்பாடி தீயணைப்பு துறையினர் வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்றில் செல்லும் நீரில் பேரிடர் செயல்விளக்க விழிப்புணர்வு நடத்தினர்.

இதில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்தும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களைத் தாங்களே எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்தும் பொதுமக்களிடையே செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

அதோடு, மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி