வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த மூலகாங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள ஜலபதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
மலைப்பாம்பு காட்டுப்பன்றி குட்டியை முழுங்கி விட்டதால் அதனால் வேகமாக செல்ல முடியாமல் தத்தளித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை போராடி பிடித்து குடியாத்தம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் குடியாத்தம் வப்பகுதி காப்புக் காட்டுக்குள் விட்டனர்.
10 நீள மலை பாம்பு விவசாய நிலத்தில் புகுந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.