கூலிபெண் தொழிலாளிக்கு இரண்டு புள்ளி 39 கோடி வரி கடிதம்

79பார்த்தது
ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி பெண் தொழிலாளிக்கு 2. 39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் பெயரில் தொடரும் ஜி. எஸ். டி வரி ஏய்ப்பு சம்பவங்களால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி



திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், கிருஷ்ணாபுரம், 3 வது காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராணிபாபு (60) இவருக்கு சங்கர் என்ற மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் ராணிபாபு கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பெரியவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் ராணிபாபுவிற்கு திருச்சி, கல்லிக்குடி வடக்கு பகுதியில் மாடர்ன் என்டர்பிரைஸ் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதன் பேரில் 2 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 24 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் கூலித்தொழிலாளி ராணி பாபு அதிர்ச்சியடைந்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பின்னர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி