வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு மற்றும் அதிகாலை மழை பெய்தது. பொய்கை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மழை நீர் புகுந்து தேங்கியுள்ளது.
இதனால் ஆவணங்கள் மற்றும் கணினிகள் சேதமடைந்துள்ளது. கட்டிடம் பழமையானது என்றும், மழைக்காலங்களில் இது போன்று நிகழ்வதால் புதிய கட்டிடம் கேட்டு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "புதிய கட்டிடம் கட்டுவதற்கான முன்மொழிவு ஏற்கனவே அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், "என கூறினர்.