குஜராத் மற்றும் ஓசூர் பகுதிக்கு காற்றாலை மிஷின்கள், மின் உதிரி பாகங்கள் ஏற்றி சென்ற லாரிகள் எதிர் திசையில் திருப்பி அனுப்பியதால்
ஆம்பூர் நகர பகுதியில் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு
ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அவதி
ராணிப்பேட்டையில் இருந்து குஜராத் மற்றும் சென்னையில் இருந்து ஓசூர் பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு காற்றாலை மிஷின்கள் மற்றும் மின் உதிரி பாகங்கள் ஏற்றி கொண்டு குஜராத் , ஓசூர் நோக்கி செல்லும் கண்டைனர் லாரிகள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர பகுதிக்குள் வந்தபோது மேம்பாலப் பணிகளால் கடந்த ஒன்றரை வருட காலமாக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பப்படுவதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் விடியற்காலையில் குஜராத் மற்றும் ஓசூர் நோக்கி சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் எதிர் திசையில் (பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி அனுப்பப்பட்டதால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கீ. மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
மேலும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண் மேல்சிகிச்சைக்காக ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் செல்ல போக்குவரத்து பாதிப்பால் சுமார் 15 நிமிடங்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின.