தமிழ்நாட்டு மக்களை நாகரீகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என்று நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திமுக நகர செயலாளர் பூங்காவனம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அவரது உருவ பொம்மையை எரித்தனர்.