வேலூர்: தவெக மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு உற்சாக வரவேற்பு

65பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக வேல்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் வேலூரில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கிரீன் சர்க்கிள், அண்ணா சாலை வரை பேரணியாக சென்றவர்கள் தவெகவின் கொள்கை தலைவர்களான காமராஜர், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

தொடர்புடைய செய்தி