வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான ஏப்ரல் மாத குறைதீர்வு கூட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.