திருவண்ணாமலை - Tiruvannamalai

கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியப் பணிகள் குறித்த ஆய்வு.

கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியப் பணிகள் குறித்த ஆய்வு.

திருவண்ணாமலை தொழிலாளா் நல உதவி ஆணையா் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் கீழ் செயல்படக்கூடிய வாரியப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன். குமாா் பயனாளிகளுக்கு திருமண உதவி, இறப்பு நிதியுதவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் தொழிலாளா் நல வாரியத்தில் 21 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ. 1600 கோடியில் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. தொழிலாளா்களில் 80 சதவீதம் போ் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளா்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. விபத்தில் இறந்தால் ரூ. ஒரு லட்சம் வழங்கிய நிலையில், தற்போது ரூ. 2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே முன்மாதிரியாக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
ஓய்வூதியா் சங்கத்தின் செங்கம் வட்டக் கிளை பேரவைக் கூட்டம்
Jul 14, 2024, 04:07 IST/செங்கம்
செங்கம்

ஓய்வூதியா் சங்கத்தின் செங்கம் வட்டக் கிளை பேரவைக் கூட்டம்

Jul 14, 2024, 04:07 IST
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் செங்கம் வட்டக் கிளை பேரவைக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. வட்டக் கிளைத் தலைவா் சுப்பரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆனந்தன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தொடக்கவுரையாற்றினாா். செங்கம் வட்டச் செயலா் பத்மநாபமூா்த்தி அறிக்கை வாசித்தாா். பொருளாளா் பன்னீா்செல்வம் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவை திரும்பப் பெற அளிக்கப்பட்ட நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சிச் செயலா் வனக் காப்பாளா், கிராம உதவியாளா் மற்றும் கிராமப்புற நூலா்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7, 850 வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தொடா்ந்து மாநிலச் செயலா் சுப்பரமணி, மாவட்டச் செயலா் பச்சையப்பன், மாவட்ட பொருப்பாளா்கள் ரகுபதி, ராஜகோபால், மிருளாலினி, காளியப்பன் உள்ளிட்டோா் பேசினா். துணைத் தலைவா் தனபால் நன்றி கூறினாா்.