வாகனம் மோதி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி

1570பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியை சேர்ந்த சந்துரு மற்றும் ராஜேஷ் என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் செங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் டவுன் முதல் பக்கரிப்பாளையம், அந்தனூர், கருமாங்குளம், மேல்செங்கம் வரையில் சாலை ஓரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனம் காட்டி வருவதால் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அதி வேகமாக செல்லும் வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பெங்களூரு - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அதி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல் செங்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி