திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அ. முஹமத் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்தின் தெற்கு எல்லையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேந்திரமாக அறிவிக்கப்பட்ட ரஃபா பகுதியில் கூடாரங்களில் இரவில் உரங்கிக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை கொன்றுகுவித்துள்ள இஸ்ரேலின் செயல் உலகில் மனசாட்சி உள்ள எந்த மனிதனாலும் ஆதரிக்க முடியாத ஒன்று.
இதுவரை காசாவில் நடந்த படுகொலைகளை விட உச்சபட்ச அத்துமீறல் இனப்படுகொலையை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேலின் படுகொலைகளை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றம் (ஐசிஐ) அறிவித்த பிறகும் இஸ்ரேலின் காதுகளுக்கு அவை கேட்கவில்லை. தொடர்ந்து இனபடுகொலையில் ஈடுபடும் இஸ்ரேல் உடனான தூதுரக உறவை இந்தியா உடனே துண்டித்துக்கொள்ள வேண்டும்.
பாலஸ்தீன மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவும் தன்னாட்சி பெற்ற பாலஸ்தீனம் இயங்க தன்னாலான அனைத்து முயற்சிகளும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.