கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியப் பணிகள் குறித்த ஆய்வு.

50பார்த்தது
கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியப் பணிகள் குறித்த ஆய்வு.
திருவண்ணாமலை தொழிலாளா் நல உதவி ஆணையா் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் கீழ் செயல்படக்கூடிய வாரியப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன். குமாா் பயனாளிகளுக்கு திருமண உதவி, இறப்பு நிதியுதவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் தொழிலாளா் நல வாரியத்தில் 21 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ. 1600 கோடியில் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

தொழிலாளா்களில் 80 சதவீதம் போ் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளா்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. விபத்தில் இறந்தால் ரூ. ஒரு லட்சம் வழங்கிய நிலையில், தற்போது ரூ. 2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கே முன்மாதிரியாக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாா்.

தொடர்புடைய செய்தி