
திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப். 14) முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை, புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழா வேலூர் சாலை, ஈசான்ய மைதானத்தில் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாசித்து வருகின்றனர்.