திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சி, குப்பம் கிராமம் மற்றும் ஊத்தூர் கிராமத்தில் மின்வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய்: 25. 00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஏழு (25-KVA) மின்மாற்றிகளை போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
உடன், சேத்துப்பட்டு செயற்பொறியாளர் T. ரவிச்சந்திரபாபு, உதவி செயற்பொறியாளர் A. இளவரசி,
உதவி பொறியாளர், E. தனலட்சுமி, பணியாளர்கள், சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர், E. ஸ்ரீதர் சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் P. ராகவன், போளூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் A. ராஜன் போளூர் பேரூராட்சி செயலாளர், G. பாண்டுரங்கன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர், குருவிமலை A. கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி செயலாளர், R. சத்யராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.