திருவண்ணாமலை: வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

56பார்த்தது
திருவண்ணாமலை: வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா். மந்தாகினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ. குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வரைவு வாக்காளா் பட்டியலின்படி புதிதாக 8, 815 ஆண்கள், 10, 005 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 5 போ் என 18, 825 போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்த 7, 424 ஆண்கள், 7, 673 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 15, 099 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி